| கொலிவுட்டில் விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தில் ஜெய் நடிப்பதாக வெளியான செய்தியை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மறுத்துள்ளார். |
| பகவதி படத்தில் விஜய் தம்பியாக நடித்த ஜெய், மீண்டும் துப்பாக்கி படத்தில் விஜய் தம்பியாக நடிக்கிறார் என்ற செய்தி திரையுலகில் வலம் வந்தது. இந்த விடயத்தை நாயகன் ஜெய் உறுதிபடுத்திய நிலையில், துப்பாக்கி இயக்குனர் முருகதாஸ் மறுத்துள்ளார். இதுகுறித்து முருகதாஸ் அளித்துள்ள பேட்டியில், என்னுடைய துப்பாக்கி படத்தில் விஜய் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கதைப்படி அவருக்கு தம்பி வேடமே இல்லை. இந்நிலையில் ஜெய், விஜய்க்கு தம்பியாக நடிக்கிறார் என்று தவறான செய்தி கொலிவுட்டில் வெளியாகியுள்ளது என்று முருகதாஸ் கூறியுள்ளார். தற்போது துப்பாக்கி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மும்பையில் நடைபெற்று வருகிறது. என்கவுண்டர் சிறப்பு பொலிஸ் அதிகாரியாக விஜய் துப்பாக்கியில் நடிக்கிறார். |
Tuesday, 6 March 2012
துப்பாக்கியில் ஜெய் நடிக்க வில்லை: முருகதாஸ்
Thursday, 19 January 2012
துப்பாக்கி திரைப்படத்தில் ஏகான்
| ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் துப்பாக்கி திரைப்படத்தில் பிரபல பாடகரான ஏகான் பாடிவுள்ளார். |
| ஸ்மாக் தட் என்ற ஒரே ஆல்பத்தின் மூலம் இசை உலகில் புகழின் உச்சத்திற்கு சென்றவர் பிரபல பாடகரான ஏகான். தற்போது ஏகான் துப்பாக்கி திரைப்படத்திற்காக ஒரு பாடலை பாட இருக்கிறார். இப்பாடலின் பதிவு விரைவில் சென்னையில் நடைபெறவுள்ளது. சம்மக் சலோ பாடலைவிட அதிகமாக, துப்பாக்கி பாடல் வரவேற்பை பெற வேண்டும் என்று ஏகானிடம் கூறியுள்ளார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். |
விஜய் வேடத்தை மாற்றிய இயக்குனர் முருகதாஸ்
| இளையதளபதி விஜய் நடிக்கும் துப்பாக்கி திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளது. |
| கொலிவுட்டில் இளையதளபதி விஜய், முருகதாஸ், ஹாரீஸ் ஜெயராஜ் கூட்டணியில் துப்பாக்கி படம் வேகமாக உருவாகி வருகிறது. இந்தப்படத்துக்காக நாயகன் விஜய்யின் வேடத்தை இயக்குனர் முருகதாஸ் மாற்றியுள்ளார். இந்தப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பை வானகரம் சந்தையில் சண்டைக்காட்சியை படமாக்கியுள்ளார்கள். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் பரபரப்பாக நடந்து வருகிறது. தன்னுடைய படத்திற்கு நீண்ட நாட்கள் ஆகக்கூடாது என்பதற்காக, பணிகளை வேகமாக விஜய் முடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. |
Friday, 13 January 2012
Nanban kerala First Day Collections
‘Nanban’ 1.39 Crore first day from kerala, 76 theatres had all 4 shows full, while 9 theatres had 3 shows full except the very first shows.
http://cineandhra.net/site/tamil/nanban-kerala-first-day-collections

http://cineandhra.net/site/tamil/nanban-kerala-first-day-collections

Tuesday, 10 January 2012
இளைய தளபதி விஜய்க்காக உருவாகும் தளபதி ANTHEM
| தமிழ் திரையுலகில் முன்னணி நாயகர்கள் தற்போது தங்களுடைய பாடல்கள் மூலம் பிரபலமடைந்து வருகின்றார்கள். இதையடுத்து விஜய் ரசிகர்கள், விஜய்க்காக THALAPATHY ANTHEM என்ற பெயரில் ஒரு பாடல் ஒன்றை உருவாக்கி வருகிறார்கள். எங்கேயும் எப்போதும் படத்தில் வரும் பேருந்து காட்சிகளில் கல்லூரி மாணவனாக நடித்த வாட்சன் என்பவர் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். டிவிட்டர் இணையத்தில் இது குறித்து விஜய் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். இப்பாடலை தனது நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி வரும் வாட்சன், வருகிற 20ம் திகதிக்குள் இப்பாடலை தயார் செய்து வெளியிட தீர்மானித்து இருக்கிறார். |
Monday, 9 January 2012
SUN PICTURES SNAPS UP " NANBAN"
BREAKING NEWS"""""
"
IN an interesting last minute
Friday, 6 January 2012
Monday, 2 January 2012
அதிகளவு திரையரங்குகளை கைப்பற்றிய நண்பன்
| தமிழ் திரையுலகில் வருகிற பொங்கலுக்கு நண்பன், வேட்டை திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன. |
| தமிழ் திரையுலகில் பெரிய இயக்குனர்கள் இயக்கியுள்ள நண்பன், வேட்டை திரைப்படங்கள் பொங்கலுக்கு திரையிடப்பட உள்ளன. நண்பன், பாலிவுட்டில் வெளியான 3 இடியட்ஸ் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். அடுத்ததாக மாதவன், ஆர்யா நடித்துள்ள வேட்டை திரைப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கியுள்ளார். நாயகிகளாக சமீரா ரெட்டி, அமலா பால் நடித்துள்ளார். ஆர்யா, மாதவன் இருவரும் அண்ணன், தம்பியாக நடித்துள்ளனர். நண்பன், வேட்டை ஆகிய இந்த இரண்டு திரைப்படங்களும் வருகிற பொங்கல் தின கொண்டாட்டமாக தமிழ்நாட்டில் திரையிடப்படுகிறது. வருகிற 12 ம் திகதி சென்னையில் 20க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் நண்பன், வேட்டை திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. |
Subscribe to:
Comments (Atom)





